kalappaiyin Mel Kaikalai song lyrics – கலப்பையின் மேல் கைகளை
kalappaiyin Mel Kaikalai song lyrics – கலப்பையின் மேல் கைகளை
கலப்பையின் மேல் கைகளை-நாம்
வைத்து விட்டோம்
கலங்கி இனி பின் திரும்பி
பார்க்க மாட்டோம்
உலகம் இனிவேண்டாம்-நம் இயேசு போதும் (2)
அல்லேலூயா அல்லேலூயா(2)
1.வல்லவரை அறிந்துக் கொண்டோம்
நல்ல பங்கை தெரிந்துக் கொண்டோம்
உள்ளமதில் நிறைவாய்-அவரை ஏற்றுக் கொண்டோம்
இன்னல்களை அவர்மேல் வைத்தோம்
தொல்லைகளை தொலைத்தே விட்டோம்
வள்ளலவர் பிள்ளையாக-மாறிவிட்டோம்
உலகத்தில் உண்மை இல்லை அதிலெமக்கு பங்கும் இல்லை
இயேசுவைப் போல் நேசர் இல்லை-அவர்போதுமே
அல்லேலூயா அல்லேலூயா (2)
2.பரிசுத்த தெய்வம் அவரே
பரலோக ராஜன் அவரை
துன்பங்கள் தீர்க்கும்-நல்ல துணையாளரே
அணையாத தீபம் அவரே
ஆதரையில் ஒளியும் அவரே
நீதியின் சூரியன்
அவரே-நிலையானவர்
இருளான பாவம் வேண்டாம்
அழிகின்ற லோகம் வேண்டாம்
அழியாத தேவன் இயேசு அவர் போதுமே
அல்லேலூயா அல்லேலூயா (2)
கலப்பையின் மேல் கைகளை-நாம்
வைத்து விட்டோம்
கலங்கி இனி பின் திரும்பி
பார்க்க மாட்டோம்
உலகம் இனிவேண்டாம்-நம் இயேசு போதும்
அல்லேலூயா அல்லேலூயா (2)