Unga Pirasannam Illatha Oru naalum song lyrics – உங்க பிரசன்னம் இல்லாத ஒரு நாளும்

Deal Score0
Deal Score0

Unga Pirasannam Illatha Oru naalum song lyrics – உங்க பிரசன்னம் இல்லாத ஒரு நாளும்

உங்க பிரசன்னம் இல்லாத ஒரு நாளும் வேண்டாம்
உங்க கிருபை இல்லாத ஒரு நிமிஷமும் வேண்டாம்
உங்க சமு கம் இல்லாத ஒரு ஓட்டமும் வேண்டாம்
நீங்க இல்லாம எனக்கொரு வாழ்க்கையும் வேண்டாம்

இயேசப்பா ….. நீங்க மட்டும் போதும்பா ( Yessppa Neenga Mattum Pothumpa)
இயேசப்பா ….. உங்க சமுகம் போதும்பா

  1. உங்க முகத்தைப் பார்க்க ஆசை
    உங்க குரலைக் கேட்க ஆசை
    உம்மோடு எந்நாளும் நடக்க ஆசை
    உங்க சித்தம் அறிந்து அதை செய்ய ஆசை
  2. உம்மோடு வாழ ஆசை
    உம்மோடு பழக ஆசை
    உங்க அன்பின் கதகதப்பில் இருக்க ஆசை
    உம்மை அதிகமதிகமாய் ருசிக்க ஆசை
  3. உம்மோடு பேச ஆசை
    என் மனதைத் திறக்க ஆசை
    உங்க நேச மார்பினில் சாய ஆசை
    இந்த உலகை மறந்து உம்மில் மகிழ ஆசை

Yessppa Neenga Mattum Pothumpa song lyrics

Jeba
      Tamil Christians songs book
      Logo