Yhwh Deivame tamil Christian song lyrics – யாவே தெய்வமே

Deal Score0
Deal Score0

Yhwh Deivame tamil Christian song lyrics – யாவே தெய்வமே

ஓ..ஆபிரகாமின் தேவனே அற்புதங்கள் செய்பவரே
ஈசாக்கின் தேவனே என்னை ஆசீர்வதிப்பவரே
யாக்கோபின் தேவனே என் தலைமுறைகளின் தேவனே
தாவீதின் தேவனே என்னை உயர்த்தி வைப்பீரே -2

இருக்கின்றவராக இருப்பவரே
எங்கள் யாவே தெய்வமே
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
எங்கள் யாவே தெய்வமே
ஓ நீர் யாவே
ஓ யுத்தம் எனக்காய் செய்பவரே
ஓ நீர் யாவே
விடுவிப்பதில் வல்லவரே

1.மோசேயோடு சொன்னது போல் நீர் இருக்கின்றவராய் இருக்கின்றவர் பார்வோனின் சதிகளெல்லாம் எனக்காய் முன்னின்று ஜெயிப்பவர் -2
யாவே சர்வ வல்ல நாமம்
தலைமுறை தோறும் அவர் பெயர் பிரஸ்தாபம்-2 – இருக்கின்றவராக

2.என் உபத்திரவங்கள் பார்க்கிறார்
என் கூக்குரலை அவர் கேட்கிறார்
என் வேதனைகள் முற்றும் அறிகிறார்
யாவே எனக்காய் இருக்கிறார்
ஓ யாவே இரக்கத்தின் தேவன்
சுவாசிக்கும் யாவற்றும் அவரே மெய் தெய்வம் -2 -ஆபிரகாமின்

எங்கள் தகப்பனே வணங்கா கழுத்துள்ள ஜனம் என்று அறிந்திருந்தும் உம்முடையதாசனாகிய மோசேயை அனுப்பி தம் ஜனத்தை எகிப்தின் சிறையிருப்பிலிருந்து விடுவித்த தேவன் தகுதியில்லாத புறஜாதிகளாகிய
எங்களுக்கும் உம்முடைய ஒரே பேரான குமாரன் இயேசு கிறிஸ்துவை கிருபாதார பலியாய் கொடுத்து சிலுவையில் அவர் சிந்தின இரத்தத்தினால் பாவக் கட்டுகளில் இருந்து விடுவித்து எங்களையும் உம் சொந்த ஜனமாய்
மாற்றினீரே நீரே எங்களுக்கும் எங்கள் சந்ததிகளுக்கும் தலைமுறை தலைமுறையாக தெய்வமாய் இருப்பீராக

Yahweh Deivamae யாவே தெய்வமே song lyrics

Jeba
      Tamil Christians songs book
      Logo