Vaalibame Vaalibame vairakkiyam song lyrics – வாலிபமே வாலிபமே வைராக்கியம்
Vaalibame Vaalibame vairakkiyam song yrics – வாலிபமே வாலிபமே வைராக்கியம்
வாலிபமே வாலிபமே !வைராக்கியம் கொள்ளு !
வையகத்தில் நல் ஆவியிலே வாழ்ந்திட வழி சொல்லு ! (2)
(1) காரிருளின் தாழ்வினிலே கலங்கிடும் நேரமதில்
காருண்யரின் கரமதையே கனிவுடன் பற்றிடுவாய் ! (2)
கர்த்தரில் வழிதனை ஒப்புக்கொடுத்து கருத்தாய் ஜெபித்திடுவாய் !
அவரே உன்னை வளமாய் உயர்த்தி ஆசி அருள்வார் !
வாலிபமே
(2) கிருபையினை பகிர்ந்திடவே பார்தனில் அவதரித்து
சிலுவையிலே பாடுகளை பரமன் சகித்தாரே ! (2)
கிருபையும் மகிமையும் செறிந்திடும் வாழ்வை
மகிழ்வுடன் வாழ்ந்திடவே
வல்லவர் இயேசுவின் சித்தமறிந்து
அவர் வழி நடந்திடுவாய் ! -வாலிபமே
(3) வருகையது நெருங்கிடுதே ஆயத்தமாகிடுவாய் !
வான்பரனின் ராஜ்ஜியத்தில் மறுமையில் சேர்ந்திடுவாய் ! (2)
இதய கதவினை இன்று திறந்து இறையருள் பெற்றிடவே
இகமதில் இன்பம் இனிதே பெருக
இயேசுவை போற்றிடுவாய் ! – வாலிபமே