Mannorai meetka vantha rajavae song lyrics – மண்ணோரை மீட்க வந்த ராஜாவே
Mannorai meetka vantha rajavae song lyrics – மண்ணோரை மீட்க வந்த ராஜாவே
- மண்ணோரை மீட்க வந்த ராஜாவே
விண்ணின்று மீண்டும் வாருமே
மண்ணோராம் எம்மை விண்ணோடு சேர்க்க
விண் தூதரோடு வாருமே
பின்பற்றுவோர்க்கு பிதாவின் வீட்டில்
பேரின்பத்தோடு வாழ்வதற்கு
வாசஸ்தலங்கள் உண்டென்று சொல்லி
சென்ற எம் தேவா வாருமே
- அறியாத நேரம் வருவேனென்றீரே
அடியார்கள் என்றும் ஊக்கத்தோடே
விசுவாசம் அன்பு நம்பிக்கையோடு
விழித்திருக்க அன்பால் அருள் தாருமே
நித்திரை செய்யும் தேவ தாசரும்
இத்தரை வாழ்வு பெற்ற நாமும்
கீர்த்தனம் பாடி எதிர்கொண்டு செல்ல
கெம்பீரமாக வாருமே
Mannorai meetka vantha rajavae tamil Christian song lyrics