Poovaipola Uthirthidum song lyrics – பூவைப்போல உதிர்ந்திடும்
Poovaipola Uthirthidum song lyrics – பூவைப்போல உதிர்ந்திடும்
பூவைப்போல உதிர்ந்திடும்
புல்லைப் போல உலர்ந்திடும்
(இந்தப்) பூமியின் நாளெல்லாம் (2)
என் தேவையே நீர் தானே!
என் தேவையெல்லாம் இயேசு தானே!
என் தேவையெல்லாம் இயேசு தானே! (2)
(பாவ) இருள் சூழ்ந்த உலகத்திலே
என்னைப் பிரகாசிக்கும் ஒளியே! (2)
எனக்குள்ளே வந்தென்னை இரட்சித்திடும்
ஜீவன் இயேசுதானே! (2) – என் தேவையே
அநித்திய பாவ சந்தோஷம்
அது அடிமையாக்கிடுமே (2)
நித்திய சந்தோஷம் இயேசு தானே!
விடுதலை தருபவரே! (2) – என் தேவையே
(என்னை) வழுவாமல் காப்பவரே!
உம் மகிமையின் திருமுன்னே! (2)
(என்னை) மகிழ்ச்சியோடே மாசற்றோனாய்
நிறுத்திட வல்லவரே! (2) – என் தேவையே
பூவைப்போல உதிர்ந்திடும்
புல்லைப் போல உலர்ந்திடும்
(இந்தப்) பூமியின் நாளெல்லாம் (2)
Poovai pola Uthirthidum Tamil Christian song lyrics