Poiyaana Ulagamidhu song lyrics – பொய்யான உலகமிது
Poiyaana Ulagamidhu song lyrics – பொய்யான உலகமிது
பொய்யான உலகமிது
பொய்யான உடலுமிது
பொய்யான வாழ்க்கையிது
புகையைப்போல் மறைந்திடுது
பொக்கிஷத்தை குவியலாய்
சேர்த்து வைச்சாலும்
பணத்தை கோடி கோடியாய்
பதுக்கி வைச்சாலும்
ஒத்த காச கூட நீயும்
கொண்டு போக முடியாதே
ஒத்துக் கொண்டு நீயும் வாழ்ந்தா
புத்திசாலி இப்போதே
போகும் போது ஒன்றுமே உந்தன் கூட வராது
சேர்த்த செல்வம் சொத்துக்கள் சொட்டு கண்ணீர் விடாது
மாளிகைகள் ஆயிரம் மனிதா உனக்கு இருந்தாலும்
மண்ணுக்குள் மாளிகை மட்டும் நிரந்தரமே எந்நாளும் – பொக்கிஷத்தை
மரணத்துக்கு அப்பால வாழ்க்கை ஒன்னும் இருக்குது
மத்தின் கெட்ட குணங்கள் தான் அந்த வாழ்வைக் கெடுக்குது
கல்வாரி சிலுவையோ உன்னை கழுவ அழைக்குது
கர்த்தர் யேசு சிந்தின ரத்தம் கழுவி தகுதிப்படுத்துது – பொக்கிஷத்தை
யேசுசாமி கிட்ட வந்து பாவியின்னு ஓத்துக்கோ
பாவங்களை அறிக்கை செஞ்சி மன்னிப்பை நீ பெற்றுக்கொ
இலவசமா யேசு தரும் இரட்சிப்பத்தான் வாங்கிக்கோ
மதத்தை நீயும் மாத்தவே வேணாம் மனசைத்தான் மாத்திக்கோ – பொக்கிஷத்தை