வானங்கள் ஒழிந்தாலும் – Vaanangal Ozhinthalum song lyrics
வானங்கள் ஒழிந்தாலும் – Vaanangal Ozhinthalum song lyrics
வானங்கள் ஒழிந்தாலும், பூமி நிலைகுலைந்தாலும்…
என்றென்றும் மாறாதவர், என் இயேசுவே… என் நேசரே…
வருஷம் பொழிந்தாலும், இடி மின்னல் தொனித்தாலும்…
எப்போதும் கைவிடாத, என் மேய்ப்பரே… என் தேவனே…
உயரத்தில் இருப்பவரே… உன்னதமானவரே…
சிங்காசனத்தில் என்றும், வீற்றிருப்பவர்… சர்வவல்லவர்…
வானங்கள் ஒழிந்தாலும், பூமி நிலைகுலைந்தாலும்…
என்றென்றும் மாறாதவர், என் இயேசுவே… என் நேசரே…
பாவம் நிறைந்த உலகத்திலே, பரலோகம் விட்டு வந்தீரே…
காலமெல்லாம் உம்மோடு இருக்கவே, பரிசுத்த வாழ்க்கை தந்தீரே…
உம் இரத்தத்தாலே மீட்டு, முகமுகமாய் பேசினீரே… 2
காலங்கள், மாறினால், உம்மை சேவிப்பேன்…
என் மீட்பர், என் ரட்சகர்…
வானங்கள் ஒழிந்தாலும், பூமி நிலைகுலைந்தாலும்…
என்றென்றும் மாறாதவர், என் இயேசுவே… என் நேசரே…
மரித்த லாசருவின் சடலத்தை, மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பிநீர்…
வியாதி பட்ட வேலைக்காரனை உம், வார்த்தையாலே சுகம் தந்தீரே…
உம் வல்ல வார்த்தையால, உம் வல்ல புயத்தினாலே… 2
சுகம் தந்து, உம்மைத் துதிக்க, என்றென்றும் காத்தவர்…
சுகம் தந்தவர், என் இயேசுவே…
கூனியாய் இருந்த ஸ்திரீயை உம், வார்த்தையால நிமிர வைத்தீரே…
பெதஸ்தாவில் இருந்த குருடனை உம், கரத்தாலே பார்வை தந்தீரே…
ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும்… 2
ஐயாயிரம் பேருக்கு, திருப்தியாய் தந்தவரே…
அற்புதமே, என் இயேசுவே…
இரட்சிப்பை எனக்கு தந்தீரே, உமக்கென்று என்னை வனைந்தீரே…
ஆவியின் வரங்கள் தந்தீரே, ஆத்துமாவை அண்டை சேர்க்கவே…
உண்மையும் உத்தமன் என்று, என்னை நீர் அழைக்கவே… 2
ஜீவ கிரீடம், எனக்குத் தந்து, மார்போடு அனைப்பவரே…
என் ராஜனே, என் இயேசுவே…
வானங்கள் ஒழிந்தாலும், பூமி நிலைகுலைந்தாலும்…
என்றென்றும் மாறாதவர், என் இயேசுவே… என் நேசரே…
வருஷம் பொழிந்தாலும், இடி மின்னல் தொனித்தாலும்…
எப்போதும் கைவிடாத, என் மேய்ப்பரே… என் தேவனே…
உயரத்தில் இருப்பவரே… உன்னதமானவரே…
சிங்காசனத்தில் என்றும், வீற்றிருப்பவர்… சர்வவல்லவர்…
வானங்கள் ஒழிந்தாலும், பூமி நிலைகுலைந்தாலும்…
என்றென்றும் மாறாதவர், என் இயேசுவே… என் நேசரே
Sarvavallavar – சர்வ வல்லவர்