மூவா முதற் பொருளே நாளும் – Moova Muthar Porulae Naalum
பல்லவி
மூவா முதற் பொருளே நாளும்
ஈவா யெமக் கருளே
தேவா தினசரி காவாய் எளியோரை
மேவு நல்லாண்டி திலே
சரணங்கள்
1.காலமெலாந் தவறி ஆதிக்
கோலமெலா மிழந்தோம்.
சீலமெலா மினிச் சீர்படச் செய்து
ஞாலமெலாம் வணங்க
2.நித்தமும் சராசரங்கள் நேராய்
தத்தம் நெறிசெல்ல நின்
சித்தமே புரிந்து சீர்பதம் சேர்ந்து
புத்துயிர் யாம் பெறவே
3.வழிதப்பி நடந்தோமையா என்றும்
இழிதொழில் புரிந்தோமையா,
பழிபவ மகன்று பாழ்வழி துறந்து
அழிவிலா ஆக்கம் பெற
4. துத்திய சத்தியனே நிதமும்
பத்தியின் பாதை மேவி புத்தி
தெளிந்து பூரணமடைந்தே;
சித்தியாய் முத்திபெற
Moova Muthar Porulae Naalum song lyrics in english
Moova Muthar Porulae Naalum
Eevaai Emakkarulae
Devaa Dinasari kaavaai Eliyorai
Meavu Nallaandi Thilae
1.Kaalamelaan Thavari Aathik
Kolamelam Elanthom
Seelamela Mini Seerpada Seithu
Gnalamellaam Vananga
2.Niththamum Saraasarangal Nearaai
Thaththam Neri Sella Nin
Siththamae Purinthu Seerpatham Searnthu
Puththuyir Yaam Peravae
3.Vazhi Thappi Nadanthomaiya Entrum
Elithozhil Purinthomaiya
Pazhi Pava Mantru Paazhvazhi Thuranthu
Azhivila Aakkam Pera
4.Thuththiya Saththiyanae Nithamum
Bakthiyin Paathai Meavi Puththi
Thealinthu Pooranmadainthae
Siththiyaai Muththipera
–