விடுதலை தருபவர் – VIDUTHALAI THARUBAVAR
யாரும் இல்லாமல் தவிக்கின்றாயோ ?
யார் துணை இல்லாமல் கலங்குகிறாயோ ?
உன்னையும் நேசிக்க, இரு கரம் நீட்டியே
தாயைப்போல் உன்னையும் அன்பாய் அழைக்கின்றார் .
விடுதலை தருபவர் உன் அருகில் இருக்கிறார்
(1)நீ நம்பும் மனிதர் உன்னை வெறுத்தாலும்
நீ தேடும் மனிதர் உன்னை மறந்தாலும்
தோல்விதான் வாழ்க்கையோ, வேதனை வருத்தமோ ?
உன்னையும் நேசிக்க அன்பாய் அழைக்கிறார்
விடுதலை தருபவர் உன் அருகில் இருக்கிறார்
(2)பாவத்தின் குழியினிலே அமிழ்ந்து போனாலும்
சாபத்தின் கட்டுகளால் கவிழ்த்து போனாலும்
சிலுவையில் உனக்காக பாவத்தை ஜெயித்தவர்
உன்னையும் விடுவிக்க அன்பாய் அழைக்கிறார்
ஓடி வா ஓடி வா உன் இயேசு இருக்கிறார்
விடுதலை தருபவர் உன் அருகில் இருக்கிறார்