உண்மையாய் நேசிக்கிறேன் – UNMAIYAI NASIKIREN
இயேசுவே நீரே என் வாஞ்சை
இயேசுவே நீரே என் வாழ்க்கை
உம்மை நேசிக்கிறேன்
உண்மையாய் நேசிக்கிறேன்
கண்ணீரின் பாதையில் நடந்தேன்
கானலாம் உலகை நேசித்தேன்
அன்பினால் தேடி வந்தீர்
புது மனிதனாய் மாற்றிவிட்டீர்
பாவியாய் உலகில் இருந்தேன்
சாபத்தின் சின்னமாய் திரிந்தேன்
என்னையும் நேசித்தீரே
செல்வ சீமானாய் மாற்றினீரே
சொன்னதை செய்து முடித்தீர்
சுகமாய் வாழ வைத்தீர்
எனக்காய் யாவும் செய்தீர்
எந்தன் தலையை உயர்த்திவைத்தீர்