அதிகாலையில் உம்மை – ATHIKAALAIYIL UMMAI

Deal Score0
Deal Score0

அதிகாலையில் உம்மை – ATHIKAALAIYIL UMMAI

அதிகாலையில் உம்மை தேடிவந்தேன்
கிருபைகள் தந்திடும் என் இயேசையா
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சமே
எனக்குஅடைக்கலம் நீர்தானே

1.தாயின் கருவினில் உருவாகும் முன்பே
உந்தன் கண்கள் கண்டது என்னை
பாரில் உந்தன் நாமம் மகிமைபடவே
என்னை பெயர்சொல்லி அழைத்தீர் முன்பே-2
உயிர் உள்ளளவும் உம்மை பாடிடுவேன்-2
என்னை நடத்திடுமே பயன் படுத்திடுமே-2

2.உந்தன் சித்தம் நிறைவேற என்னை
தந்தேன் உந்தன் கரங்களில் என்னை
முழு பெலனால் நிரப்பியே என்னை
நித்தம் நடத்துவீர் நீதியின் பாதையில்-2
தெய்வ மகிமையினால் தினம் நிரப்பிடுமே-2
எந்த வேளையிலும் உம்மை துதித்திடுவேன்-2

Jeba
      Tamil Christians songs book
      Logo