அன்பின் ரூபி மோட்சானந்தம் – Anbin Roobi Motchanantham
1.அன்பின் ரூபி, மோட்சானந்தம்
பாரில் ஈய வந்தீரே;
எங்கள் ஏழை நெஞ்சில் வாசம்
பண்ணி மருள் தீர்ப்பீரே;
யேசுவே நீர் பரிதாபம்
அன்புமாய் இருக்கிறீர்;
பார துக்கங்கொண்ட உள்ளம்
வந்து தேற்றல் செய்குவீர்.
2.உமது நல் ஆவி தாரும்,
எங்கள் நெஞ்சு பூரிப்பாய்
உம்மில் சார நீரே வாரும்,
சுத்த நேச வடிவாய்;
பாவ ஆசை எல்லாம் நீக்கி
அடியாரை ரட்சியும்,
விசுவாசத்தைத் துவக்கி
முடிப்பவராய் இரும்.
3.சர்வ வல்லவரே, வாரும்,
நாங்கள் உமதாலயம்
எங்களுக்குத் தயை தாரும்
என்றும் விலாகாதேயும்;
என்றும் உம்மை ஸ்தோத்திரித்து,
வானோர் போல சேவிப்போம்;
குறைவற்ற அன்பைப் பெற்று
ஒழியாமல் துதிப்போம்.
4.நாங்கள் மோட்ச வீட்டில் சேர்ந்து
கரை திரை இன்றியே
உந்தன் சாயல் பெற்று வாழ்ந்து
தேவ அன்பில் மூழ்கியே
எங்கள் க்ரீடம் உன்தன் பாதம்
வைத்துப் போற்றும் வரைக்கும்
நாதா, அடியாரை நித்தம்
மறு ரூபமாக்கிடும்.
Anbin Roobi Motchanantham song lyrics in English
1.Anbin Roobi Motchanantham
Paaril Eeya Vantheerae
Engal Yealai Nenjil Vaasam
Panni Marul Theerppeerae
Yesuvae Neer Parithaabam
Anbumaai Irukkireer
Paar Thukkam Konda Ullam
Vanthu Theattral Seiguveer
2.Umathu Nal Aavi Thaarum
Engal Nenju Poorippaai
Ummil Saara Neerae Vaarum
Suththa Neasa Vadivaai
Paava Aasai Ellaam Neekki
Adiyaarai Ratchiyum
Visuvaasaththai Thuvakki
Mudippavaraai irum
3.Sarva Vallavarae Vaarum
Naangal Umathalayam
Engalukku Thayai Thaarum
Entrum Vilakatheayum
Entrum Ummai Sthosthirithu
Vanor Pola Seavippom
Kuraivattra Anbai Pettru
Oliyamal Thuthippom
4.Naangal Motcha Veettil Searnthu
Karai Thirai Intriyae
Unthan Saayal Pettru Vaalnthu
Deva Anbil Moolikiyae
Engal Kireedam Umthan Paatham
Vaithu Pottrum Varaikkum
Naatha Adiyaarai Niththam
Maru Roobamakkidum