வானாதி தாள் காட்டும் – Vaanathi Thaazh Kaattum

வானாதி தாள் காட்டும் – Vaanathi Thaazh Kaattum

வானாதி தாள் காட்டும் – நல்ல
வாத்தி சுவிசேஷம்

அனுபல்லவி

கோன் ஆதி இயேசு கிறிஸ்து மொழிந்ததோர்
கோதில்லா’ நீதி நிறைந்த சுவிசேஷம்.

சரணங்கள்

1.ஆதி ஒளி தோண, நல்ல அறிவு மிகக் காண-சத்திய
நீதியின் வேர் ஊண,-அதை-நீணிலத்தோர் பூண
ஜாதிகளான சகல மனிதரும்
சத்ய மறை என்று துத்யம்’ புரியவும் -வானாதி

2.அன்பு நிறைந்திடவும்,-கெட்ட-ஆசை குறைந்திடவும்-மோட்ச
இன்பம் சிறந்திடவும்,-பாவ-இருள்கள் மறைந்திடவும்,
முன்பு நடந்த முரட்டாட்டத்தை விட்டு
முற்றிலும் நற்குண சுத்தம் பெருகவும் – வானாதி

3.கார்இருள் நீங்கிடவும்-பாவக் கயிறுபின் வாங்கிடவும்-நித்ய
பேர்ஒளி ஓங்கிடவும்-சத்ய-பிரபல்யம் நூங்கிடவும்
தாரணியில் உள்ள சர்வ மனிதரும்
சத்ய பிதா எனும் வஸ்துவைச் சேரவும் – வானாதி

4.பாலர்கள் கூடிடவும்-நித்ய-பரகதி தேடிடவும்-ஜீவ
காலங்கள் நீடிடவும், மோட்ச-கன முடி சூடிடவும்
கோலம் நிறைந்த மணவாளன் இயேசுவைக்
கூடி அனுதினம் பாடித் துதிக்கவும் – வானாதி

Vaanathi Thaazh Kaattum song lyrics in English

Vaanathi Thaazh Kaattum Nalla
Vaaththi Suvishesam

Koan Aathi Yesu Kiristhu Molinthathor
Kothilla Neethi Nirantha Suvishesam

1.Aathi ozhi Thona Nalla Arivu Miga Kaana Saththiya
Neethiyin Vear Oona Athau Neenilathor Poona
Jaathikalaana Sahala Manitharum
Sathya Marai Entru Thuthyam Puriyavum

2.Anbu Nirainthidavum Keatta Aasai Kurainthidavum
Inbam Siranthidavum Paava Irulgal Marainthidavum
Munbu Nadantha Murattataththai Vittu
Muttrilum Narguna Suththam Perugavum

3.Kaar Irul Neengidavum Paava Kayirupin Vaangidavum Nithya
Pear Oli Oongidavum Sathya Pirapalyam Noongidavum
Thaaraniyil Ulla Sarva Manitharum
Sathya Pitha Enum Vasthuvai Searavum

4.Paalargal Koodidavum Nitjya Parakathi Theadidavum Jeeva
Kaalangal Needidavum Motcha Kana Mudi Soodidavum
Kolam Nirantha Manavaalan Yesuvai
Koodi Anuthinamum Paadi Thuthikkavum

ஆண்டவர் வசனம் தந்தார்; அதைப் பிரசித்தப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி.
சங்கீதம் 68 : 11