ஆசையென் ஏசு ராஜனார் வாசலில் நிற்கிறார்
வானகம் சேர்க்க தாசரை மானில மேவுவார்
வாஞ்சித்த நாளதாம் எனக்கு பாடி மகிழ
பாதகரான யாவரும் பயந்தொளிந்திட
வான் எக்காளமே தொனித்திடுமே
நான் அந்நேரமே ஜொலித்திடுவேன்(2)
மின்னொளி வீசிடுமாற்போல் விண்ணொளி தூதரானோரும் சங்கீதம் பாடுவார்
இன்னில பக்தர் யாவரும் இன்றபுற்று ஆடுவார்
சிற்றின் பத்தாரோர் யாவரும் சிதைந்து மாளுவார்
தீயோனின் மக்கள் யாவரும் தீ நரகுக்காகுவர்
சீயோன் மனையாட்டியானோள் சீரோடு வாழ்வாள்
நீ எந்த கூட்டத்தேயிருப்பாய் என்றாராயுவாய்
மீட்பருக்காக ஜீவித்தால் பேரின்பம் பெறுவாய்
செல்லாதே காலம் மேலுமே செஞ்செல்வர் வரவே
எல்லா மறைப்பொருளுமே வெளிவந்தாகுமே
மேன்மை எனக்கு கிட்டுமே என் மெய்யும் மாறுமே
என் துக்கம் துன்பம் யாவுமே இல்லாமல் போகுமே
வேத நாயகன் கூட்டமே மங்களம் பாடவே
வேந்தன் கிறிஸ்து நாதரும் மனம் மகிழவே
மேலோக சம்மன சோரும் கேட்டு களிக்கவே
வேத சேயன்மார் யாவரும் சேர்ந்தே துதிக்கவே
We will be happy to hear your thoughts