
விண்ணகமே இறங்கி வாரும் – Vinagamey Irangivarum
விண்ணகமே இறங்கி வாரும் – Vinagamey Irangivarum
விண்ணகமே இறங்கி வாரும்
தூய பனித்துளியாய்
விண்ணகமே இறங்கி வாரும்
தூய பெருமழையாய்
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
அபிஷேக மழையாய் என்மீது இறங்கும்
உம்மை வாஞ்சிக்கிறேன்.
1. மோசையோடே முகமுகமாய்
பேசின சர்வ வல்ல தேவனே
இன்றும் எங்களோடே முகமுகமாய்
தரிசனங்கள் தந்திடுமே
2. எலியா மேல் உள்ள அபிஷேகத்தை
எலிசாவுக்கு தந்தீரே
இன்றும் உம்மேல் உள்ள அபிஷேகத்தை
இரட்டிப்பாய் எங்களுக்கு தரவேண்டுமே
3. பேதுரு யோவான் யாக்கோபை
மறுரூபமாகச் செய்தீரே
இன்றும் எங்களையும் மறுரூபமாய்
பரலோகத்தை காணச் செய்யுமே