மெய்யாகவே நான் சீக்கிரமாய் – Meiyaai Naan Seekkiramaai
மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன்
இயேசுவே வாரும் என்ற சத்தம் தொனிக்குதே இப்பூமியில் (2)
1. பாவிகளை தள்ளிடா எங்கள் தேவா னே
பலவீனனாய் உம் பாதம் வருகிறேன் (2)
பலப்படுத்தும் உம் அபிஷேகத்தால் என்னை
பரிசுத்தமாக்கும் உம்மை சந்திக்கவே (2) -மெய்யாகவே
2. மரணத்தின் இருளின் பள்ளத்தாக்கே எந்தன் படுக்கையானதே
பொல்லாப்பும் நெருக்குதே இந்த உலகத்திலே (2)
சத்துருவும் என்னை அழிக்க துடிக்கிறான்
சிலுவையில் ஜெயித்த இயேசு வருகின்றாரே உன்னையும்
என்னையும் எடுத்துசென்றிடவே (2) -மெய்யாகவே
3: தேவனுடைய நாளும் சீக்கிரமே
தேசத்திற்க்காய் திறப்பில் நின்றிடுவாயா (2)
தேசத்தை இயேசுவிற்க்காய் நாம் சுதந்தரிக்க
தேவ சித்தம் செய்திட அற்ப்பணிப்போம் (2) -மெய்யாகவே