முழங்காலில் நின்று வீட்டை – Mulangaalil Nindru Veettai

முழங்காலில் நின்று வீட்டை – Mulangaalil Nindru Veettai

முழங்காலில் நின்று வீட்டைக் கட்டிடு,
ஜெபத்திலே தரித்திருந்து ஜெயத்தை பெற்றிடு; -(2)
துதியும் ஜெபமும் வேதவாசிப்பும், உனது இறக்கைகள்,
பரலோகம் மட்டும் பார் முழுவதும், பறந்து சென்றிடு; -(2)
வாழ்ந்து மகிழ்ந்திடு, ஆமென் அல்லேலூயா-4

1. உன் வீட்டைக் கட்டுவதிலே கர்த்தர்,
பிரியமாய் இருக்கின்றார்,
அதைச் சித்திரம் தீர்ப்பதிலே கர்த்தர்,
கரிசனையாய் இருக்கின்றார்; -(2)
உன் வீடு நிலைநிற்கும்,
உன் குடும்பம் ஆசி பெறும் -(2) …….(முழங்காலில் நின்று)

2. கற்பாறை மீதினிலே உந்தன்,
வீட்டைக் கட்ட வேண்டும்,
வசனத்தின்படி வாழ்ந்து உந்தன்,
வீட்டைக் கட்ட வேண்டும்; -(2)
குடும்ப ஜெபம் பண்ணிடணும்,
தனி ஜெபமும் பண்ணிடணும்; -(2) …….(முழங்காலில் நின்று)

3. உற்றார் சுற்றார் குடும்பமெல்லாம்,
பிதாவின் சித்தம் செய்ய வேண்டும்,
பரலோக பூலோக நன்மைகளை,
சுதந்தரிக்க வேண்டும்; -(2)
பிசாசுகள்மேல் ஜெயம் எடுக்கணும்,
ஆவியானவரால் நிரம்பிட வேண்டும்; -(2) …….(முழங்காலில் நின்று)