மாணிக்கத் தொட்டில் இல்லை – Manika Thottil Illai

மாணிக்கத் தொட்டில் இல்லை – Manika Thottil Illai

மாணிக்கத் தொட்டில் இல்லை உமக்கன்று
மாட்டுக் கொட்டிலில் உந்தன் வீடு அன்று
காணிக்கையாய் தந்தேன் இதயம் இன்று
உம் வீடாக்கி வாழும் பாலகா இன்று

மாணிக்கத் தொட்டில் இல்லை

மேலோக தூதர்கள் பாடிடவே
பரம சிங்காசனம் வீற்றிராமல்
மேலோக தூதர்கள் பாடிடவே
பரம சிங்காசனம் வீற்றிராமல்

பாவியிலும் கடும் பாவியை மீட்க
மேவி வந்தீர் இம்மேதினியில்

வாரீரோ வாரீரோ வாரீரோ வாரீரோ
வாரீரோ வாரீரோ

மாணிக்கத் தொட்டில் இல்லை

தூதர்கள் மேய்ப்பர்கள் பாடினரே
ஞானிகளும் உம்மை வாழ்த்தினரே
தூதர்கள் மேய்ப்பர்கள் பாடினரே
ஞானிகளும் உம்மை வாழ்த்தினரே

பாதகன் நான் உம்மைப் பாடிடுவேனே
வாயார வாழ்த்தியே ஆரிரரோ

ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ

மாணிக்கத் தொட்டில் இல்லை உமக்கன்று
மாட்டுக் கொட்டிலில் உந்தன் வீடு அன்று
காணிக்கையாய் தந்தேன் இதயம் இன்று
உம் வீடாக்கி வாழும் பாலகா இன்று

ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ