மலரே எமக்காக இப்பூவில் மலர்த்தாயோ – Malare Yemakaga Ipoovil Malarnthayo
மலரே எமக்காக இப்பூவில் மலர்த்தாயோ
குளிரில் அன்னை மரி மடியில்
விண்தூதர் சேனைகள் துதி பாடிட
மலர்ந்தாயே இம்மானுவேலாய்
மலரே எமக்காக இப்பூவில் மலர்த்தாயோ
குளிரில் அன்னை மரி மடியில்
நடு இரவில் கடும் குளிரில்
மேய்ப்பர்க்கு நற்செய்தி தூதர் சொன்னார்
மானிடரைக் காப்பதற்கு
இறைவன் மனிதனாய் பிறந்தார் இன்று
விண்ணிலே தேவனுக்கே மகிமை
பூமியிலே மெய் சமாதானம்
மானிடர்மேல் பிரியமென்று
பாடியே தூதர் மறைந்தாரே
மேய்ப்பர் அவரைக் கண்டு மகிழ்ந்தார்
மலரே எமக்காக இப்பூவில் மலர்த்தாயோ
குளிரில் அன்னை மரி மடியில்
வானத்திலே வீண்மீனை
கண்டே ஞானிகள் வந்தனரே
பூவுலகின் மீட்பர் இவர்
என்றே போற்றிப் புகழ்ந்தனரே
பொன்போள தூபவர்க்கத்தையும்
காணிக்கையாகப் படைத்தனரே
விண் ஆளும் தேவ மைந்தனையே
கண்ணாரக் கண்டு மகிழ்ந்தனரே
நாமும் சென்று அவர் பாதம் தொழுவோம்
மலரே எமக்காக இப்பூவில் மலர்த்தாயோ
குளிரில் அன்னை மரி மடியில்
விண்தூதர் சேனைகள் துதி பாடிட
மலர்ந்தாயே இம்மானுவேலாய்
மலரே எமக்காக இப்பூவில் மலர்த்தாயோ
குளிரில் அன்னை மரி மடியில்