பாலஸ்தீன பூங்காற்றே – Palastheena Poonkatre

பாலஸ்தீன பூங்காற்றே – Palastheena Poonkatre

பாலஸ்தீன பூங்காற்றே
எங்கும் வீசும் பாச உயிர் காற்றே
பாலஸ்தீன பூங்காற்றே
எங்கும் வீசும் பாச உயிர் காற்றே

உன்னை சுவாசிக்க சுவாசிக்க
உயிரும் சிலிர்க்கின்றதே
நேசிக்க நேசிக்க
நேயம் துளிர்கின்றதே

பாலஸ்தீன பூங்காற்றே
எங்கும் வீசும் பாச உயிர் காற்றே

இங்கே நீ ஏன் பிறந்தாய்
இங்கே நீ ஏன் பிறந்தாய்
மண்ணில் ஒன்றாய் கலந்துவிட்டாய்
ஏழை எம்மை ஏன் நினைத்தாய்
உன் நிழலில் நடக்கவைத்தாய்
அன்பே அருளே உறவே உயிரே
கருணை மழையினில் நெஞ்சம் நனைகிறதே

ஓ இயேசு நாதா எங்கள் நேச நாதா
ஓ ஜீவ நாதா உன் சுவாசம் தா

பாலஸ்தீன பூங்காற்றே
எங்கும் வீசும் பாச உயிர் காற்றே

வழியும் ஒளியும் தெரிகின்றதே
வழியும் ஒளியும் தெரிகின்றதே
வாழ்வும் வளமும் நிறைகின்றதே
மேற்கும் கிழக்கும் இணைகின்றதே
உயர்வும் தாழ்வும் மறைகின்றதே
வழியே வாழ்வே உயிரின் துணையே
உயிர்களின் மாண்பு எங்கும் மலர்கிறதே

ஓ இயேசு நாதா எங்கள் நேச நாதா
ஓ ஜீவ நாதா உன் சுவாசம் தா

பாலஸ்தீன பூங்காற்றே
எங்கும் வீசும் பாச உயிர் காற்றே
பாலஸ்தீன பூங்காற்றே
எங்கும் வீசும் பாச உயிர் காற்றே

உன்னை சுவாசிக்க சுவாசிக்க
உயிரும் சிலிர்க்கின்றதே
நேசிக்க நேசிக்க
நேயம் துளிர்கின்றதே

பாலஸ்தீன பூங்காற்றே
எங்கும் வீசும் பாச உயிர் காற்றே