நீ அறியாததை செய்பவர் – Nee Ariyathathai Seibavar
நீ அறியாததை செய்பவர்
உனக்கு எட்டாததை செய்பவர்(2)
பெரிய காரியம் அறிவிப்பவர்
அவர் தான் இயேசு, இயேசு இரட்சகர்
அவர் தான் கர்த்தர் இயேசு இரட்சகர்
என்னை நோக்கிக் கூப்பிடு உத்தரவு
அருளி நன்மையால் நிறைத்திடுவேன்
ஏந்துவேன் சுமப்பேன் தப்புவிப்பேன்
1. திக்கற்ற பிள்ளையாய் விட்டு விடேன்
வலக்கரம் பற்றி பிடித்துள்ளேன்(2)
பயப்படாதே உன்னோடிருக்கிறேன்
பயப்படாதே துணை நிற்கிறேன்(2)என்னை
2. மலைகள் விலகி மாறினாலும்
பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்(2)
மாறிடாது என் கிருபை
மாறிடாது என் சமாதானம்(2)- என்னை
3. கேட்பவர் எவரும் பெற்றுக் கொள்வார்
தேடுவோரர் யாவரும் கண்டடைவார்
தட்டுவோர்க்குத் திறக்கப்படும்
பெற்றுக் கொள்வார் வல்லமையை