நரனாம் எளியேன் நற்கதி சேர – Naranaam Eliyean Narkathi Seara

நரனாம் எளியேன் நற்கதி சேர – Naranaam Eliyean Narkathi Seara

கண்ணிகள்

1 நரனாம் எளியேன் நற்கதி சேர,
பரனே, உன் அருள் செய், என் பவவினை தீர.

2. தரணியோர்க் காக நரர் உரு தரித்தாய்;
தகுநெறி விளக்கிட மிகவும் சஞ்சரித்தாய்.

3.இகபரம் அனைத்தும் வகையுடன் படைத்தாய்;
எளியோர்க்கென் றாவின் கொட்டில் வழி வரத் தொடுத்தாய்.

4.பாவிகள் உயிர்த்து ஜீவனைக் கூட,
பரிவுடன் பாடடைந்தீர், திரு ரத்தம் ஓட.

5.இந்நிலத் தவர்க்காய் நல்நெறி முடிக்க,
“இழிமரத் தறையுண்டீர் எழில் உடல் துடிக்க.

6. பாதகன் ஒருவன் தீதுணர்ந் துருக
பரதீசில் அமைத்தீரே, அருள் மிகப் பெருக.

7. மரணத்தின் கூர்போய் நரர் என்றும் நேரே
வாழ்ந்து பரத்துறவே ‘ஆழ்ந்துயிர்த் தீரே.

Naranaam Eliyean Narkathi Seara song lyrics in English

1.Naranaam Eliyean Narkathi Seara
Paranae Un Arul Sei En Pavavinai Theera

2.Tharaniyorkkaga Narar Uru Tharithaai
Thaguneari Vilakkida Migavum Sanjarithaai

3.Igaparam Anaithum Vagaiyudan Padaithaai
Eliyorkenravain Kottil Vazhi Varathoduthaai

4.Paavigal Uyirthu Jeevanai Kooda
Pariyudan Paadadaintheer Thiru Raththam Ooda

5.Innilan Thavarkkaai Nalneari Mudikka
Elimara Tharaiyundeer Ezhil Udal Thudikka

6.Paathagan Oruvan Theethunarnthuruga
Paratheesil Amaintheerae Arul Miga Peruga

7.Maranathin Koorpoai Narar Entrum Nearae
Vaalnthu Parathuravae Aalnthuyirtheerae