தாவீதின் ஊரில் நம் இயேசு பிறந்தாரே – Thaveethin Ooril Nam Yesu
தாவீதின் ஊரில் நம் இயேசு பிறந்தாரே
தம் திருப்பாதம் தொழுகை செய்குவோம்
தாவீதின் ஊரில் நம் இயேசு பிறந்தாரே
தம் திருப்பாதம் தொழுகை செய்குவோம்
தேவன் மனிதனின் ரூபத்தில் வந்தார்
தூதர் திரள் சேனை துதிகள் பாட
எல்லா ஜனத்திற்கும் மா சந்தோஷமே
எங்கும் ஓர் நற்செய்தியே
எங்கும் ஓர் நற்செய்தியே
தாவீதின் ஊரில் நம் இயேசு பிறந்தாரே
தம் திருப்பாதம் தொழுகை செய்குவோம்
பரிசுத்தாவி செயலினாலே
பரன் பூவில் அவதரித்தார்
மண்ணான சாயல் தரிக்கும் இயேசு
மாறாதவர் தம் வல்லமையில்
தாவீதின் ஊரில் நம் இயேசு பிறந்தாரே
தம் திருப்பாதம் தொழுகை செய்குவோம்
புனிதனாக மனிதன் மாறி
புது சிருஷ்டி ஆகிடவே
இழந்துபோன ஜனத்தைத் தேட
இரட்சகரே வந்தார் பூவிலே
தாவீதின் ஊரில் நம் இயேசு பிறந்தாரே
தம் திருப்பாதம் தொழுகை செய்குவோம்
குறைபெறாத தேவக்குமாரன்
ஒளிப்பிதாவின் அன்பளிப்பே
பெற்றுக்கொண்டோம் நாம் கெட்டுப்போகாமல்
பரமனின் நித்திய ஜீவனே
தாவீதின் ஊரில் நம் இயேசு பிறந்தாரே
தம் திருப்பாதம் தொழுகை செய்குவோம்
தாவீதின் ஊரில் நம் இயேசு பிறந்தாரே
தம் திருப்பாதம் தொழுகை செய்குவோம்
தாவீதின் ஊரில் நம் இயேசு பிறந்தாரே
தம் திருப்பாதம் தொழுகை செய்குவோம்