சோர்ந்திடும் நேரத்தில் – Sornthidum Nearathil
சோர்ந்திடும் நேரத்தில் – Sornthidum Nearathil
சோர்ந்திடும் நேரத்தில் உம்மையல்லாமல்
சார்ந்திட யாருமில்லை
கண்ணீரின் பாதையில் உம்மையல்லாமல்
தேற்றிட யாருமில்லை
1. அழுதிட பெலனின்றி தவித்திடும் நேரத்தில்
எங்கு நான் சென்றிடுவேன்
அப்பா உம் பாதத்தில் என் முகம் பதித்து – 2
இதயத்தை ஊற்றிடுவேன் – 2
2. மெதுவான தென்றல் பெரும் புயலாகி
என்மேல் மோதுகையில்
பயந்திட மாட்டேன் (நான்) பதறிட மாட்டேன் (நான்) – 2
இயேசுவே உம்மை நம்புவேன் – 2
3. சோதனை சகிப்போர் பாக்கியவான்கள்
பொன்னாக விளங்குவார்கள்
காத்திருப்பேன் நான் புது பெலன் அடைவேன்- 2
கழுகைப்போல் எழும்பிடுவேன் – 2
Sornthidum Nearathil song lyrics in english
Sornthidum Nearathil Ummaiyallamal
Saarnthida Yaarumillai
Kanneerin Paathaiyil Ummaiyallamal
Theattrida Yaarumillai
1.Aluthida Belanintri Thavithidum Nearathil
Engu Naan Sentriduvean
Appa Um Paathathil En Mugam Pathithu-2
Idhayaththai Oottriduvean-2
2.Methuvaana Thentral Perum Pugalagi
Enmel Mothukaiyil
Bayanthida Maattean (Naan) Patharida Maattean (Naan) -2
Yesuvae Ummai Nambuvean
3.Sothanai Sagippor Bakkiyavangal
Ponnaga Vilanguvaargal
Kaathirupean Naan puthu Belan Adaivean-2
Kalugai Poal Elumbiduvean