சிலுவை மரத்தில் அன்பராம் – Siluvai Maraththil
சிலுவை மரத்தில் அன்பராம் இயேசு
சிறுமை அடைந்தே தொங்குகின்றார்
நம் மீறுதலால் இயேசு காயப்பட்டார்
நம் அக்கிரமத்தால் அவர் நொறுக்கப்பட்டார்
1.பிதாவே இவர்களை மன்னியும்
தாங்கள் செய்வது இன்னதென்றறியாரே
என்றவர் கதறல் ஓசையில்
மன்னிப்பின் தொனி ஒலிக்கின்றதே
2.இன்றைக்கு நீ என்னுடனே கூட
பரதீசில் இருப்பாய் என்றாரே
இரட்சிப்பின் குரல் கேட்கின்றதே
இரட்சகரை இன்றே சேர்ந்திடுவோம்
3.ஸ்திரீயே அதோ உன் மகன்
அதோ உன் தாய் என்ற நல் நேசரவர்
பொங்கிடும் அன்பு பார்வையுடன்
பொறுப்பினை தந்து தொங்குகின்றார்
4.தேவனே என் தேவனே ஏன்
என்னை கைவிட்டீர் என்று அவர் கதறுகிறார்
அங்கம் சிதைந்த ஆண்டவர்
அங்கலாய்ப்பின் ஓசை எழுப்புகின்றார்
5.தாகம் தீர்க்கும் கன்மலையவர்
இன்று தாகமாய் இருக்கிறேன் என்றார்
ஆத்துமா தாகம் கொண்டவர்
தவிப்புடன் நம்மை அழைக்கிறாரே
6.தந்தையின் சித்தமே செய்து முடிக்க
மண்ணில் வந்தவர் அனைத்தும் செய்து முடித்தார்
முடிந்தது என்ற வார்த்தையில்
முழுமையாய் அவர் வெற்றி சிறந்தார்
7.பிதாவே உம்முடைய கைகளில்
என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்றே
ஜீவன் தந்த இயேசுவின்
அர்ப்பணிப்பின் சத்தம் அழைக்கின்றதே