கண் கலங்கும்போதெல்லாம் – Kan Kalangum Pothellam

Deal Score0
Deal Score0

கண் கலங்கும்போதெல்லாம் – Kan Kalangum Pothellam

கண் கலங்கும்போதெல்லாம்
கண்ணீரை துடைக்கும் நண்பனே
கரையில் வந்த மீனைப்போல்
துடிக்கிறேனே தவிக்கிறேனே

இயேசுவே சொந்தமே உம்மை நான் மறப்பேனோ
உம்மை மறந்து இப்போ நான் வாழ்வேனோ

கண் கலங்கும்போதெல்லாம்
கண்ணீரை துடைக்கும் நண்பனே
கரையில் வந்த மீனைப்போல்
துடிக்கிறேனே தவிக்கிறேனே

1.ஊழியப்பாதையில் பல நெருக்கம்
சொல்ல முடியா மனத்தயக்கம் -2
காரணம் இல்லா காயங்கள் ஏனோ -2
கண்ணீர் வடிக்கிறேனே

இயேசுவே சொந்தமே உம்மை நான் மறப்பேனோ
உம்மை மறந்து.. இப்போ நான் வாழ்வேனோ

கண் கலங்கும்போதெல்லாம்
கண்ணீரை துடைக்கும் நண்பனே

2.மனதின் காயத்தை சொல்லிடவா
சொன்னால் மட்டும் ஆறிடுமா -2
என்னை அறிந்த தேவன் நீரே – 2
கைவிடுவதில்லை

இயேசுவே சொந்தமே உம்மை நான் மறப்பேனோ
உம்மை மறந்து.. இப்போ நான் வாழ்வேனோ

கண் கலங்கும்போதெல்லாம்
கண்ணீரை துடைக்கும் நண்பனே
கரையில் வந்த மீனைப்போல்
துடிக்கிறேனே தவிக்கிறேனே

Jeba
      Tamil Christians songs book
      Logo