கண்ணீரை காண்கின்ற தேவன் – Kanneerai Kaankintra Devan

Deal Score+1
Deal Score+1

கண்ணீரை காண்கின்ற தேவன் – Kanneerai Kaankintra Devan

கண்ணீரை காண்கின்ற தேவன் கரம் நீட்டி துடைத்திடுவார் – உன்
கலங்காதே கலங்காதே கண்மணி போல் உன்னை காத்திடுவார்

சுமக்கும் கழுதையின் பாங்கினை பார்
சோகத்தை யாரிடம் கூறிடும் கேள்
உனக்கு மேலே ஒருவருண்டு உன் பாரம் சுமக்க அவரும் உண்டு

தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும்
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும்
சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே
பரத்திலிருந்து ஜெயம் வரும்பரன் உன்னைக்காக்கவல்லோர்
காக்கும்வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே

குழப்பங்கள் தேவையில்லை
மன பாரங்கள் தேவையில்லை x 2
என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை
அனுதினம் நாடிடுவேன் x 2

என் தேவைளை நீர் பார்த்துக்கொள்வீர்
அழைத்தவர் நீரல்லவோ
கலங்கிட மாட்டேன் பயந்திட மாட்டேன்
குழப்பங்கள் தேவையில்லை x 2

நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
நேசர் நீர் அணைத்தீரே
கைவிடப்பட்டு கதறினேன்
கர்த்தர் நீர் தேற்றினீர்

என் இயேசு ராஜாவுக்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்
என்னோடு வாழ்பவர்க்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்

கலங்காதே கலங்காதே கண்மணி போல் உன்னை காத்திடுவார்
கலங்காதே கலங்காதே கரம் பிடுத்து நம்மை நடத்திடுவார்.

Christian
      Tamil Christians songs book
      Logo