என் தேவனாகிய ராஜா – Yen Thevanagiya Raja

என் தேவனாகிய ராஜா – Yen Thevanagiya Raja

என் தேவனாகிய ராஜா
உந்தன் தாழ் பணிந்து போற்றுவேனே
என் தேவனாகிய ராஜா
உந்தன் தாழ் பணிந்து போற்றுவேனே

என் தேவனாகிய ராஜா

காரிருளை மீட்க வந்தவரே
பாருக்குள் ஜோதியாய் திகழ்வோரே
காரிருளை மீட்க வந்தவரே
பாருக்குள் ஜோதியாய் திகழ்வோரே
பாவப் பாரத்தை சுமப்போரெல்லாரையும்
பாவப் பாரத்தை சுமப்போரெல்லாரையும்
வருந்தி அன்பாய் அழைக்கின்றாரே

என் தேவனாகிய ராஜா

வாக்குத்தத்தப்படி வந்தவரே
வல்லமையால் நிறைந்தவரே
வாக்குத்தத்தப்படி வந்தவரே
வல்லமையால் நிறைந்தவரே
வந்தவர் யாரையும் புறம்பே தள்ளாரே
வந்தவர் யாரையும் புறம்பே தள்ளாரே
வாவென்று உன்னை அழைக்கின்றாரே

என் தேவனாகிய ராஜா

காணா ஆட்டைத் தேடி வந்தவரே
தானாய் வழி என்றும் காணா நிலை கண்டு
காணா ஆட்டைத் தேடி வந்தவரே
தானாய் வழி என்றும் காணா நிலை கண்டு
நானே வழி சத்யம் ஜீவன் என்றுரைத்து
நானே வழி சத்யம் ஜீவன் என்றுரைத்து
மாமரி சுதனாய் வந்தவரே

என் தேவனாகிய ராஜா

மண் என்றும் என்னை அறிந்திருந்தும்
கண்ணிலும் மேலாய் நேசித்தவரே
மண் என்றும் என்னை அறிந்திருந்தும்
கண்ணிலும் மேலாய் நேசித்தவரே
கண்டிலையேன் எங்கும் இவ்வித அன்பிற்கு
கண்டிலையேன் எங்கும் இவ்வித அன்பிற்கு
தந்தேனய்யா ஆவி உடல் பொருள்

என் தேவனாகிய ராஜா
உந்தன் தாழ் பணிந்து போற்றுவேனே
என் தேவனாகிய ராஜா
உந்தன் தாழ் பணிந்து போற்றுவேனே

என் தேவனாகிய ராஜா