என் துணையும் நீரே தேவா – En Thunaiyum Neerae Devaa

Deal Score-1
Deal Score-1

என் துணையும் நீரே தேவா – En Thunaiyum Neerae Devaa

என் துணையும் நீரே தேவா
என் பெலனும் நீரே நாதா-2
என் தைரியமும் நீரே தேவா
என் எல்லாம் நீரே இராஜா-என் துணையும்

காப்பாற்றும் தெய்வம் நீர் தானே
கண்மணிபோல் என்றும் காத்தீரே
உம் தயவு உம் கிருபை
இதுவரையில் தாங்கினதே-என் துணையும்

கண்ணீரால் கலங்கியே
உம்மையே நோக்கினேன்
நீரே என் இயேசுவே
சந்தோஷம் தந்தீரே

துயரத்தின் நேரங்களில்
மரணத்தின் பள்ளத்தாக்கில்
நீர் என் துணையானீரே
என்னை பெலப்படுத்துமே

வழியான வசனம் நீரல்லவோ
கிருபையின் தெய்வம் நீரல்லவோ
உம் தயவு தாங்கிடுதே-என் துணையும்

எண்ணிலா துயரங்கள்
என் உள்ளத்தை உடைக்கையில்
நீரே என் இயேசுவே
என்னோடு இருந்தீரே

என் பயத்தை நீக்கிவிட்டீர்
விசுவாசம் என்னில் தந்தீர்
நீர் என் துணையானீரே
என்னை ஸ்திரப்படுத்தினீர்

நீர் இருந்தால் போதும் என் இயேசுவே
உம் அன்பை என்னில் வெளிப்படுத்தினீர்
உம் கிருபை தாங்கிடுதே-என் துணையும்

Jeba
      Tamil Christians songs book
      Logo