என் உள்ளத்தின் நோக்கமெல்லாம் – En Ullathin Nokkamellam
என் உள்ளத்தின் நோக்கம் எல்லாம்
உமக்காய் நான் வாழ்வதில்தான்
என் சிந்தையின் நோக்க மெல்லாம்
உம் சித்தம் செய்வதில்தான்
இயேசையா இயேசையா
உம் நாமம் என்றும் சார்வேன்
இயேசையா என் நேசையா
உம்மார்பில் என்றும் சாய்வேன் – என் உள்ளத்தின்
1. மனுவாக மண்மீது வந்தீரே
இம் மண்ணுக்கும் ஒரு ஜீவன் தந்தீரே
உருவான நாள் முதலாய்ப் பார்த்தீரே
உரு தந்து உயிரோடு எடுத்தீரே.- இயேசையா
2. சிறுகூட்டுப் பறவைபோல் வந்தேனே
ஒரு தாய் போல அமுதளித்து வந்தீரே
வரும்வேளை அறிந் தென்னை அழைத்தீரே
உம் திருநாமம் உரைத் தென்னை சுமந்தீரே – இயேசையா
3. ஒரு நாளில் எனை அழைக்க வருவீரே
உம் கரம் கொண்டு புதுஆடை தருவீரே
புது நாமம் கொண் டென்னை அழைத்தீரே
உம் திருநாமம் என் முகத்தில் தரிப்பீரே. – இயேசையா
4. எனக்காக உயிர் தந்து மரித்தீரே
நான் உமக்காக மனுஜீவன் தருவேனே
மறு வாழ்வும் உயர்உம்மில் பெறுவேனே
ஒரு மகளாக(மகனாக) மடியினிலே அமர்வேனே – இயேசையா