
எந்தன் ஜீவனிலும் மா அருமை – Enthan Jeevanilum Ma Arumai
எந்தன் ஜீவனிலும் மா அருமை – Enthan Jeevanilum Ma Arumai
எந்தன் ஜீவனிலும் மா அருமை
உந்தன் கிருபை கிறிஸ்தேசுவே
உந்தன் கிருபை கிறிஸ்தேசுவே
அந்தமே இல்லா அன்பின் ஆழமதை
எண்ணி நான் துதித்திடுவேனே
எந்தன் ஜீவனிலும் மா அருமை
இகமதில் என் பெலன் குறைந்திடினும்
அகமதில் உம் பெலன் பெருகுவதால்
கழுகினைப்போல் புது வாலிபம் என்னுள்ளில்
கிருபையால் அனுதினம் வளர்ந்திடுதே
கழுகினைப்போல் புது வாலிபம் என்னுள்ளில்
கிருபையால் அனுதினம் வளர்ந்திடுதே
எந்தன் ஜீவனிலும் மா அருமை
கோதுமை மணி மண்ணில் மாய்வதுபோல்
சேவையில் ஜீவனை ஊற்றிடினும்
தேவனின் கிருபையின் ஊற்றெனில் பாய்வதால்
சோராது நிறைபலன் ஈந்திடுவேன்
தேவனின் கிருபையின் ஊற்றெனில் பாய்வதால்
சோராது நிறைபலன் ஈந்திடுவேன்
எந்தன் ஜீவனிலும் மா அருமை
அற்புதமாய் என்னை அழைத்தவரே
அற்பமான எந்தன் சரீரத்தினை
தற்பரனே உந்தன் சாயலாய் மாற்றிடும்
ஒப்பற்ற சுவிசேஷம் ஈந்திட்டீரே
தற்பரனே உந்தன் சாயலாய் மாற்றிடும்
ஒப்பற்ற சுவிசேஷம் ஈந்திட்டீரே
எந்தன் ஜீவனிலும் மா அருமை
உந்தன் கிருபை கிறிஸ்தேசுவே
உந்தன் கிருபை கிறிஸ்தேசுவே
அந்தமே இல்லா அன்பின் ஆழமதை
எண்ணி நான் துதித்திடுவேனே
எண்ணி நான் துதித்திடுவேனே