உனக்காக (இயேசு) ஒருவர் உயிர்தந்தாரே – Unakkaga Yesu Oruvar
உனக்காக (இயேசு) ஒருவர் உயிர்தந்தாரே
ஒரு நாளும் அவரை நீ மறவாதே – 2
அவர் சிறந்தவர்,சிறந்ததை தருபவர்
அவர் நல்லவர் நன்மை செய்பவர் -2
1. தாய் தன் பாலகனை மறந்திடுவாளோ
தகப்பன் பிள்ளையை சுமக்காதிருப்பாரோ -2
சிங்கத்தின் குட்டிகள் பட்டினியாக இருக்கலாம். அத்திமரம் ஆட்டு மந்தை பலன் கொடாமல் போகலாம்
நேற்றும், இன்றும், என்றும் மாறா தேவன் தேவைகள் சந்தித்திடுவார்.
-அவர் சிறந்தவர்.
2. துயரங்கள் கண்டவுடன் பயந்து விடாதே
உயரங்கள் வரும் பின்னே மறந்து போகாதே -2
இன்னல்கள் வந்த போது இஸ்ரவேலர் சோர்ந்தனர்
அழைத்து வந்தவர் அரவணைத்து நடத்தினார்
உன்னையும், என்னையும் அப்படி நடத்தி
உயர்ந்த இடத்தில் வைத்திடுவார்
-அவர் சிறந்தவர்.
3. மண்ணாண மனிதனை மறுரூபமாக்குபவர்
குறைவுள்ள வாழ்க்கையை தன் நிறைவாலே நிரப்புவார் – 2
துன்பங்கள் சூழ்ந்தாலும் துவளாதே இயேசு உண்டு
மனிதர்கள் மாறினாலும் மாறாத
நேசருண்டு
உனக்கும்,எனக்கும் எல்லாவற்றையும், கல்வாரி சிலுவையில் செய்து முடித்தார்
– அவர் சிறந்தவர்