இல்லம் தோறும் அன்பை – Illam Thorum Anbai

Deal Score+1
Deal Score+1

இல்லம் தோறும் அன்பை – Illam Thorum Anbai

இல்லம் தோறும் அன்பை
விதைக்க வந்த பாலகா!
உள்ளமெங்கும் மகிழ்ச்சியாக
பிறந்த பாலகா!
கன்னிமரியை உந்தன் தாயாய் நீயும் தேர்ந்து கொண்டாய்
எம்மில் இணைந்து அன்பில் வாழ மனிதனாய் பிறந்தாய்
மன்னவன் நீயும் மண்ணில் வரவே மாட்டுக்குடில் தேர்ந்தாய்
கந்தை துணியில் கடுங்குளிரை
எமக்காய் ஏற்றாய்
விண்ணக தூதரே மகிழ்ந்து பாடுங்கள்.
மண்ணகம் பிறந்த நம் பாலனை வாழ்த்துங்கள்

1.நமது இதய தொழுவில் இன்று
இறைவன் பிறந்துள்ளார்
அவரின் பிள்ளையாய் இனிய அன்பில் வாழ்ந்து காட்டுவோம்
பாவங்கள் போக்கவே தேடி வந்துள்ளார் பாலகன் இயேசு நம்
இதயம் பிறந்துள்ளார்
உலகத்தின் ஒளி அவர்,
வாழ்க்கையின் வழி அவர்
உள்ளங்கள் ஏங்கிடும்
இணையற்ற அன்பவர்
விண்ணக தூதரே மகிழ்ந்து பாடுங்கள் மண்ணகம் பிறந்த நம் பாலனை வாழ்த்துங்கள்

2.உலகம் வாழ உலகில் வாழ
இறைவன் பிறந்துள்ளார்
வாழும் நாளை அவரில் இணைந்து அன்பாய் வாழுவோம்
மனுகுலம் மகிழ்ந்திட மீட்பர் வந்துள்ளார்
மழலையாய் மாபரன்
மண்ணில் பிறந்துள்ளார்
இடையர்கள் வணங்கிட, ஞானிகள் தேடிட மரியன்னை மடியினில்
பாலகன் தவழ்ந்திட
விண்ணக தூதரே மகிழ்ந்து பாடுங்கள்
மண்ணகம் பிறந்த நம் பாலனை வாழ்த்துங்கள்

Christian
      Tamil Christians songs book
      Logo