இயேசுவின் நாமத்தைப் போற்றிடுவோம் – Yesuvin Namathai Potriduvom

Deal Score0
Deal Score0

இயேசுவின் நாமத்தைப் போற்றிடுவோம் – Yesuvin Namathai Potriduvom

இயேசுவின் நாமத்தைப் போற்றிடுவோம்
என்றும் அவர் துதி சாற்றிடுவோம்

இயேசுவின் நாமத்தைப் போற்றிடுவோம்
என்றும் அவர் துதி சாற்றிடுவோம்

கரடுமுரடான பாதையினில்
கால் தடுமாறி தியங்குகையில்
கரடுமுரடான பாதையினில்
கால் தடுமாறி தியங்குகையில்
கருணையாய் பேசி கரமதை நீட்டி
காத்திடும் தயவதைப் பாடிடுவோம்

இயேசுவின் நாமத்தைப் போற்றிடுவோம்
என்றும் அவர் துதி சாற்றிடுவோம்

பாவத்தின் பாரத்தை நீக்கினாரே
சாபத்தின் கோரத்தைப் போக்கினாரே
பாவத்தின் பாரத்தை நீக்கினாரே
சாபத்தின் கோரத்தைப் போக்கினாரே
சாகாது வாழ சாவதை வென்ற
தேவக்குமாரனைப் பாடிடுவோம்

இயேசுவின் நாமத்தைப் போற்றிடுவோம்
என்றும் அவர் துதி சாற்றிடுவோம்

யோர்தானைக் கடந்திடும் நேரமதில்
அணைத்திடுவார் அவர் மார்பதினில்
யோர்தானைக் கடந்திடும் நேரமதில்
அணைத்திடுவார் அவர் மார்பதினில்
அக்கரை சேர்த்து அகமகிழ்விக்கும்
அன்பரின் நாமத்தைப் பாடிடுவோம்

இயேசுவின் நாமத்தைப் போற்றிடுவோம்
என்றும் அவர் துதி சாற்றிடுவோம்

இயேசுவின் நாமத்தைப் போற்றிடுவோம்
என்றும் அவர் துதி சாற்றிடுவோம்

Jeba
      Tamil Christians songs book
      Logo