இயேசப்பா நீர் என்னோடு – Yesappa Neer Ennodu Irupathanaal

இயேசப்பா நீர் என்னோடு – Yesappa Neer Ennodu Irupathanaal

இயேசப்பா நீர் என்னோடு இருப்பதனால்
இனி நான் கலங்குவதில்லை
இயேசப்பா நீர் என்னோடு இருப்பதினால்
இனி நான் தியங்குவதில்லை -2

நீர் என்னை மறப்பதில்லை
என்னை கைவிடுவதில்லை -2

புயல் காற்றினால் என் படகு
மூழ்கிடுமோ என்ற கலக்கமில்லை -2
என் படகில் நீர் இருக்க
மூழ்கிடாமல் காத்திடுவீர் -2

மனிதன் என்னை தள்ளிவிட்டான்
என்று நானும் கலங்குவதில்லை -2
அந்த மனிதர்களின் கண்கள் முன்னே
என் தலையை நீர் உயர்த்திடுவீர் -2

தடையாய் நிற்கும் யோர்தானை
கண்டு நானும் கலங்குவதில்லை -2
செங்கடலில் வழி திறந்திட்ட நீர்
யோர்தானையும் கடக்கச் செய்வீர் -2