அப்பா உம் பிரசன்னமே – Appa Um Pressanamae
அப்பா உம் பிரசன்னமே,
இவ்வேளை இறங்கிடுமே.
நிறைவாக பொழியட்டுமே,
என்னில் வழியட்டுமே.
உம் தண்ணிரால், என் தாகம் தீர்த்திடும்,
உம் செந்நீரால், என் பாவம் போக்கிடும்;
வழுவாமல் என்னை தாங்கிடுமே,
வழியெங்கும் என்னை நடத்திடுமே.
1) என் விழியெங்கும் என்றும் நிறைந்தவரே,
என் வழியெங்கும் என்முன் நின்றவரே -(2)
என் கதவுகள் உம் குரல் கேட்டு திறக்கணுமே,
என் உதடுகள் உம்மை மட்டும் துதிக்கணுமே;
நன்மையால் நிரப்பிடுமே,
உம்மைபோல் மாற்றிடுமே -(அப்பா)
2) தடுமாறிய காலத்தில், இடறாமல் காத்தவரே,
சிறையான நேரத்தில், விரைவாக வந்தவரே -(2)
நீர் சொட்டும் பனிதுளியாக பொழிந்திடுமே,
உம் திட்டம் என்னில் என்றும் தொடரணுமே;
என் தலை உயர்த்தினிரே,
என் நிலை மாற்றினிரே -(அப்பா)