தாயின் கருவில் எனைத்தெரிந்து – Thaayin Karuvil Enai Therinthu

Deal Score0
Deal Score0

தாயின் கருவில் எனைத்தெரிந்து – Thaayin Karuvil Enai Therinthu

தாயின் கருவில் எனைத்தெரிந்து
உன் சாயலாய் நீயே உருவாக்கினாய்
திருவே அபயம் தரும் உறவே
தினமென்னை அன்பால் நடத்துகின்றாய்

Chorus
இது போதுமே என் தெய்வமே
நீதானே என்வாழ்வின் ஆனந்தமே
(தாயின் கருவில்..)

1.இருள் நிறைந்த வழிதனிலே நான் நடக்க நேர்கையிலே
ஒளிச்சுடராய் எந்தன் உடனிருப்பாய்
கடல் கடந்து செல்கையிலே கடும் புயலும் சூழ்கையிலே
தஞ்சம் தருவாய் தேவா நெஞ்சம் நிறைவாய்
இமைப்பொழுதேனும் எனை மறவாமல் காக்கும் – உன்
நேசத்தினால் நீ எனையாள்கிறாய் – 2
(இது போதுமே -2)

2.எளியவரின் சார்பினிலே உன் குரலாய் ஒலித்திடவே
அருங்கொடையால் என்னை நிரப்பிடுவாய்
இறையரசின் சேவையிலே எனது பெயர் சிதைகையிலே
மனதில் வலிமை நாதா நீயே அருள்வாய்
மலர்ந்திட வேண்டும் பொன் விடியலின் காலம் – நின்
வரம் ஈந்து எனை நீ ஆளாக்குவாய் – 2

தாயின் தாயின் கருவில் எனைத்தெரிந்து
உன் சாயலாய் நீயே உருவாக்கினாய்
திருவே அபயம் தரும் உறவே
தினமென்னை அன்பால் நடத்துகின்றாய்

Jeba
      Tamil Christians songs book
      Logo