வெள்ளை புறாவே உன்னை – Vellai Puraavae Unnai

Deal Score0
Deal Score0

வெள்ளை புறாவே உன்னை – Vellai Puraavae Unnai

வெள்ளை புறாவே உன்னைப் போலவே
களங்கம் நீங்கியே விண்ணில் நீந்தவே
ஆசை நெஞ்சிலே ஆயிரம் நாளுமே
உயர உயர உயரும் உன்னதமே சிகரம்
கர்த்தருக்கு காத்திருந்தால் கனவுகூட சாத்தியம்

1. ஆவியால் பிறந்திடும் அனுபவம் மகிமைதான்
பேதைமை நீங்கிட பாதையும் மாறிடும்
பாவங்கள் தொலைந்திட தீமைகள் ஒழிந்திடும்
ஆணவம் போய்விட ஆனந்தம் பிறந்திடும்

2. எண்ணமும் இதயமும் காயமும் காலமும்
தூய்மையின் சிறகுகள் சுமந்து நான் பறக்கவும்
மென்மையாய் வாழவும் உன்னதம் காணவும்
ஆண்டவா நடத்திடும் ஆசைகள் அழித்திடும்

3. வானம் என் எல்லைதான் இயேசு என் பக்கம்தான்
ஆண்டவர் சொந்தம் நான்: தேற்றுவார் அனுதினம்
ஆவியால் நிரப்புவேன் அழகினை கூட்டுவேன்
கர்த்தரை காட்டுவேன் களிப்புடன் வாழுவேன்.

Christian
      Tamil Christians songs book
      Logo