மன வாதை அடைந்த கனபாதகன் – Mana Vaathai Adaintha Kanapaathagan

மன வாதை அடைந்த கனபாதகன் – Mana Vaathai Adaintha Kanapaathagan

பல்லவி

மன’வாதை அடைந்த கனபாதகன் வஞ்சம்
அறவே கிருபை கூர், ஐயா.

அனுபல்லவி

ஜனவானவர் சங்கம் அனைவோரும் வணங்கும்
தவிராஜ சுதந்திரா, திவ்ய ஏசு நாதேந்திரா.

சரணங்கள்

1.பாவிக்குந்தன்மேல் விசுவாசமே,-திருப்
பாதம் துணை தரும் விலாசமே,
ஜீவனே, நீர் எனக்கதி நேசமே;தேவரீர்
சித்தத்தின்படி நடக்கச் செய்யும், ப்ரகாசமே.

2.கடியும் கொடுமையாகச் சீறுதே;-மாய
கலக உலகும் பழி கூறுதே;
சடமும் திடம் இல்லாமல் மாறுதே;-மிகத்
தயங்கி, மனதெல்லாம் ‘வே சாறுதே,சுவாமி.

3.நியாயப்பிரமாணம் குற்றம் சாட்டுதே;-என்றன்
நடக்கை எலாம் பொல்லாப்பில் மாட்டுதே;
மாயப் பிரபஞ்சம் இச்சை காட்டுதே,-பாவ
வழியில் என்னை இழுத் தாட்டுதே,சுவாமி.

4.கங்குல் பகலும் கண்ணீர் ஓட்டமே;- நித்தம்
கவலை பிடித்தென் முகம் வாட்டமே;
எங்கே பார்த்தாலும் மா போராட்டமே;-கெட்ட
ஏழைக்குன் பதத்தில் மன்றாட்டமே, சுவாமி.

Mana Vaathai Adaintha Kanapaathagan song lyrics in English

Mana Vaathai Adaintha Kanapaathagan Vanjam
Arave Kirubai Koor Aiya

Janavaanavar Sangam Anaivorum Vanangum
Thaviraaja Suthanthira Dhivya Yesu Naathenthiraa

1.Paavikkunthan Mael Visuvaasamae Thiru
Paatham Thunai Tharum Vilasamae
Jeevanae Neer Enakathi Neasamae Devareer
Siththathin Padi Nadakka Seiyumae pirakasamae

2.Kadiyum Kodumaiyaga Seeruthae Maaya
Kalaga Ulagum Pazhi Kooruthae
Sadamum Thidam Illamal Maaruthae Miga
Thayangi Manathellaam Veasaaruthae Swami

3.Niyayapiramaanam Kuttram Saattuthe Entran
Nadakkai Elam Pollapil Maattuthae
Maaya Pirapanjam Itchai Kaattuthae Paava
Vazhiyil Ennai Eluththattuthae Swami

4.Kangul Pagalum Kanneer Oottamae Niththam
Kavalai Pidithen Mugam Vaattamae
Engae Paarthalum Maa Porattamae Ketta
Yealaikkun Pathathil Mantrattame Swami