பாடினால் பாடுவேன் இயேசு பாலனே – Padinal Paduven Yesu Palane

பாடினால் பாடுவேன் இயேசு பாலனே – Padinal Paduven Yesu Palane

பாடினால் பாடுவேன் இயேசு பாலனே
உன்னைப் பாடினால் துன்பம் நீங்கிடும்
பாடினால் பாடுவேன் இயேசு பாலனை
உன்னைப் பாடினால் துன்பம் நீங்கிடும்

தேடினால் தேடுவேன் தேவனே
உன்னருள் நான் தேடுவேன்
தேடுவேன்

பாடினால் பாடுவேன் இயேசு பாலனே
உன்னைப் பாடினால் துன்பம் நீங்கிடும்

பன்னிரு வயதினில் பாலகன் நீரே
எண்ணரும் போதனை இயம்பி நின்றீரே
பன்னிரு வயதினில் பாலகன் நீரே
எண்ணரும் போதனை இயம்பி நின்றீரே

கோடையில் கிடைத்த குளிர் இளநீரே
கோடையில் கிடைத்த குளிர் இளநீரே
கடையர் களித்திட கதி தருவீரே

பாடினால் பாடுவேன் இயேசு பாலனே
உன்னைப் பாடினால் துன்பம் நீங்கிடும்

பாவை உம்மைத் தொட்டதினாலே
பறந்து போனதே அவள் தன் நோயும்
பாவை உம்மைத் தொட்டதினாலே
பறந்து போனதே அவள் தன் நோயும்

பாவி எந்தன் பாவ வினைகள்
பாவி எந்தன் பாவ வினைகள்
பறந்து போகுமே உன்னை நினைத்தால்

பாடினால் பாடுவேன் இயேசு பாலனே
உன்னைப் பாடினால் துன்பம் நீங்கிடும்
பாடினால் பாடுவேன் இயேசு பாலனே
உன்னைப் பாடினால் துன்பம் நீங்கிடும்

தேடினால் தேடுவேன் தேவனே
உன்னருள் நான் தேடுவேன்
தேடுவேன்

பாடினால் பாடுவேன் இயேசு பாலனே
உன்னைப் பாடினால் துன்பம் நீங்கிடும்