கைவிடீர் என்னை என் கர்த்தாவே – Kaivideer Ennai En Karthavae

கைவிடீர் என்னை என் கர்த்தாவே – Kaivideer Ennai En Karthavae

கைவிடீர் என்னை என் கர்த்தாவே
நீர் கைவிட்டால் இங்கென்னை இரட்சிக்கவேறு
யாருமில்லை உலகில் கர்த்தாவே
எனக்காருமில்லை உலகில் கர்த்தாவே-2

1.என் மன வேதனைகள் முழுவதும் அறிந்திட உம்மைப் போல் யாருமே இல்லை என் தேவனே -2உற்றவரானாலும் உத்தமரானாலும்-2 குற்றங்கள் காண்பது மனித இயல்பாகும்-2 -கைவிடாதே

2.மனிதர் என் தேவைகள் அறிந்திட தேவையில்லை
கருணை நிறைந்தவர் அறிந்திட்டால் போதுமே-2
இன்பமோ துன்பமோ நீர் எது தந்தாலும்- 2 ஆசிர்வாதமே அது போதும் என் வாழ்வில்-2
– கைவிடாதே

3.ஒரு நாளும் உன்னை கைவிடமாட்டேன் என்ற
உம் வாக்குத்தத்தம் விசுவாசிக்கின்றேன் நான்-2
வானமும் பூமியும் மாறினாலும் -2
உன்னதர் வாக்குத்தத்தம் மாறிடாதே என்றும்