இறைவன் நமது வானகத் தந்தை – Iraivan Namathu Vanaga Thanthai
இறைவன் நமது வானகத் தந்தை
இதை உணர்ந்தாலே குளிர்ந்திடும் சிந்தை
குறைகள் தீரும் கவலைகள் மாறும்
குழம்பிய மனதினில் அமைதி வந்தேறும்
இறைவன் நமது வானகத் தந்தை
பறவைகள் விதைப்பதும் அறுப்பதும் இல்லை
பத்திரப்படுத்தி வைப்பதுமில்லை
மறந்துவிடாமல் அவைகளுக்குணவு
மறந்துவிடாமல் அவைகளுக்குணவு
வாரி வழங்கி பேணியே காக்கும்
பேணியே காக்கும் பேணியே காக்கும்
இறைவன் நமது வானகத் தந்தை
வயல்வெளி மலர்களைப் பாரீர் அவைகள்
வருந்தி உழைப்பதும் நூற்பதுமில்லை
மயங்கிடவைக்கும் இவைபோல் சாலமோன்
மயங்கிடவைக்கும் இவைபோல் சாலமோன்
மன்னனும் என்றும் உடுத்தியதில்லை
உடுத்தியதில்லை உடுத்தியதில்லை
இறைவன் நமது வானகத் தந்தை
எதனை உண்போம் எதனை உடுப்போம்
எதனைக் குடிப்போம் எனத்திகைக்காதே
முதலில் பரமனின் அரசின் நீதியை
முதலில் பரமனின் அரசின் நீதியை
முனைந்து தேடிடு சித்திக்கும் அனைத்தும்
சித்திக்கும் அனைத்தும் சித்திக்கும் அனைத்தும்
இறைவன் நமது வானகத் தந்தை
இதை உணர்ந்தாலே குளிர்ந்திடும் சிந்தை
குறைகள் தீரும் கவலைகள் மாறும்
குழம்பிய மனதினில் அமைதி வந்தேறும்
இறைவன் நமது வானகத் தந்தை