Vaalthuvom Ontraai Koodi song lyrics – வாழ்த்துவோம் ஒன்றாய் கூடி

Deal Score0
Deal Score0

Vaalthuvom Ontraai Koodi song lyrics – வாழ்த்துவோம் ஒன்றாய் கூடி

பல்லவி
வாழ்த்துவோம் ஒன்றாய் கூடி வாரீர்
Happy New Year என்று பாடி
Happy New Year… Happy New Year…

                                                       சரணம் -1 

வானம் பூமி யாவும் இங்கே
வாழ்த்தட்டும் சேர்ந்தே Happy New Year
தேவன் நமக்குத் தந்த நாட்கள்
யாவும் இங்கு ஆசீர்வாதம்
ஆத்ம ராகம், ஆனந்த கீதம் நாட்களெல்லாம் கேட்கட்டுமே
ஆண்டவன் புகழை அன்பின் நிழலை
அவனி எங்கும் பரப்பட்டுமே

வாழ்த்துவோம் ஒன்றாய் கூடி வாரீர்
Happy New Year என்று பாடி
Happy New Year… Happy New Year…
சரணம் -2
பழையன கழிதல் புதியது புகுதல்
இயற்கை தந்த சீதனமே
பகைமை ஒழித்து பண்பை வளர்த்தல்
அன்பின் இறைவன் பாசுரமே
உழைப்போர் உயர உண்மைகள் மிளிர
உலகம் விரிந்து செழிக்கட்டுமே
உன்னதன் இயேசு அரசில் நாமும்
உயர வழிகள் திறக்கட்டுமே

வாழ்த்துவோம் ஒன்றாய் கூடி வாரீர்
Happy New Year என்று பாடி
Happy New Year… Happy New Year…

                                                     சரணம் - 3

வல்லவன் தேவன் மகிமை நாதன்
வல்லமையாற்றல் நிறையட்டுமே.
வாழ்க்கையில் வெற்றி தோல்விகள் யாவிலும்
வானவன் துணை தான் ஒளிரட்டுமே
பூத்தது புதிய ஆண்டிது நமக்காய்
பூபாலம் பாடி வரவேற்போம்
காத்தவன் கருணை காவல் நிற்க
Happy New Year பாடிடுவோம்

வாழ்த்துவோம் ஒன்றாய் கூடி வாரீர்
Happy New Year என்று பாடி
Happy New Year… Happy New Year.

    Jeba
        Tamil Christians songs book
        Logo