Yesu Naan Nirkum Kanmalaye – இயேசு நான் நிற்கும்

பல்லவி

இயேசு நான் நிற்கும் கன்மலையே !-மற்ற
எந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே .

சரணங்கள்

யேசுவின் நாமத்தின் மேலே -என்றன்
எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே ;
நேசனையுங் கூட நம்பேன்.-நான்
இயேசு நாமத்தின் மேல முழுதுமே சார்வேன் .-இயேசு

இருள் அவர் அருள் முகம் மறைக்க ,-நான்
உறுதியாய் அவர் மாறாக் கிருபையில் நிலைப்பேன் ;
உரமாகக் கடும் புயல் வீச ,-சற்றும்
உலையாத எனது நங்கூரமாம் அவரே .-இயேசு

பெரு வெள்ளம்,பிரவாகம் வரினும் -அவர்
பிரதிக்னை,ஆணை ,இரத்தம் என் காவல் ;
இருதயத்தின் நிலை அசைய -அப்போ
யேசுவே என் முழு நம்பிக்கையாமே.-இயேசு

சோதியாய் அவர் வரும் போது-நான்
சுத்தனாய்த் தரிசித்தே அவரைப் போலாவேன் ;
நீதியாம் ஆடை தரிப்பேன் ,-சதா
நித்திய காலமாய் ஆளுகை செய்வேன் – இயேசு

நான் என் காவலிலே தரித்து, அரணிலே நிலைகொண்டிருந்து, அவர் எனக்கு என்ன சொல்லுவாரென்றும், அவர் என்னைக் கண்டிக்கும்போது நான் என்ன உத்தரவு சொல்லுவேனென்றும் கவனித்துப்பார்ப்பேன் என்றேன்.

I will stand upon my watch, and set me upon the tower, and will watch to see what he will say unto me, and what I shall answer when I am reproved.

ஆபகூக் : Habakkuk:2:1

good morning have a blessing day!!!!!!!!!!!!!!!!!1

Posted by ChristianMedias on Monday, April 7, 2014

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version