என்னை நடத்துபவர் நீரே
தலை உயர்த்துபவர் நீரே
ஏற்ற காலத்தில் என்னை நடத்திடுவீர் (2)
உமக்கு மறைவாக ஒன்றுமில்லையே
ஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன் (2)
1.சிறுமி என்று என்னைத் தள்ளி
முடியாதென்று நினைத்த வேளை
என் உள்ளத்தை நீர் கண்டீர்
யாருமில்லா நேரம் வந்து
தாயைப் போல என்னத் தேற்றி
கண்ணீரைத் துடைத்தீர்
உமக்கு மறைவாக ஒன்றுமில்லையே
ஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன் (2)
2.புழுதியிலும் சேற்றிலும் கிடந்தேன்
உலகத்தினால் மறக்கப்பட்டேன்
என் மகளே என்றழைத்தீர்
நேசித்தோர் என்னைக் கைவிட்ட நேரம்
உம் கரத்தால் என்னை ஏந்தி
நம்பிக்கை எனக்குள் வைத்தீர்
உமக்கு மறைவாக ஒன்றுமில்லையே
ஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன் (2)
என்னை நடத்துபவர் நீரே
தலை உயர்த்துபவர் நீரே(உயர்த்துபவரும் நீரே…ஓ )
ஏற்ற காலத்தில் என்னை நடத்திடுவீர் (2)
உமக்கு மறைவாக ஒன்றுமில்லையே
ஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன் (2)