பல்லவி
வேளை இது சபையே -நித்திரையை
விடு எழுந்திருக்க -நல்ல
அனுபல்லவி
நாளைக்கு இன்னொருவேளைக் கென்றெண்ணாமல்
காலத்தைத் தப்பாமல் கைகுட்பிடித்திட -வேளை
சரணங்கள்
நாம் விசுவாசிகளாய்த் திரும்பின
நல்வேளை தன்னிலுமே ,
ஆமீ துநல்வேளை ஐயனின் ரட்சிப்பு
அண்டையிற்கிட்டிய தென்றறி ந்தோமல்லோ.- வேளை
பாவ இருள் விடுத்தோம் -பகலத்துக்
கான வொளியடுத்தோம்;
மேவுமந்தகார வேஷக்கிரியையை
விடு வெளிச்சப் பேராயுதம் பூண்டிட ,- வேளை
தானவனாலயமே- உன்தனுட
சரீரமும் ஆத்துமமும்
நானிலமீதேசு நாயகர்க்கேற்க்காமல்
மேனியைப் பேணும் விருப்பமாகாது -வேளை
கத்தரினாலயத்தைக் -கொடுப்போனைக்
கர்த்தர் கெடுப்பதல்லால்
நித்தியதேவ கோபாக்கினைக்காளாகி
நீடூழியும் நரகாழியில் வேவானே -வேளை