Varanda Nilathil – வறண்ட நிலத்தில்
வறண்ட நிலத்தில் ஆறுகளை ஓடப்பண்ணுபவர்
வறட்சியான காலங்களைச் செழிப்பாக்குபவர் (2)
என் நேசரே, எபினேசரே
என் நேசரே, என் இயேசுவே
என் தேவை எதுவென்று நன்கு அறிந்தவர்
ஏற்றக் காலத்தில் எனக்குத் தருபவர் (2)
நீர்க்கால்கள் ஓரங்களில் என்னை வைத்திடுவார்
காலங்கள் தோறும் கனித்தந்திட செய்திடுவார் (2 )
இலை உதிராத மரம் போல செழிக்க செய்திடுவார்
நான் செய்கின்றதெல்லாமே வாய்க்கப் பண்ணிடுவார்
அவரை நம்புவதால் சந்தோஷம் பொங்கிடுதே
அவரை நேசித்து நான் களிகூர்ந்திடுவேன் (2 )
கெம்பீரமாக என்னை வாழப் பண்ணுகிறார்
உறங்காமல் தூங்காமல் என்னைக் காக்கின்றார் (2)
நிதம் துதிபாடி அவர் நீதியை விளங்கப் பண்ணிடுவேன்
அவர் உயர்வான நாமத்தினை கீர்த்தனம் பண்ணிடுவேன்