Unnaiyandri vera gethi – உன்னையன்றி வேறே கெதி song lyrics

உன்னையன்றி வேறே கெதி ஒருவரில்லையே ஸ்வாமி!
தன்னையே பலியாய் ஈந்த மன்னுயிர் ரட்சகனே!
அன்னை தந்தை உற்றார் சுற்றார் – ஆருமுதவுவரோ?
அதிசய மனுவேலா -ஆசை என் யேசு ஸ்வாமி!

1. அஞ்சியஞ்சித் தூரநின்றென் சஞ்சலங்களை நான் சொல்லி,
அலைகடல் துரும்புபோல் மலைவு கொண்டேனானையோ!
கெஞ்சிக் கெஞ்சிக் கூவுமிந்த வஞ்சகன் முகம் பாராய்க்
கிட்டி என்னிடம் சேர்ந்து கிருபை வை யேசு ஸ்வாமி!

2. எத்தனை கற்றாலும் தேவ பக்தியேது மற்ற பாவி,
எவ்வளவு புத்தி கேட்டும் அவ்வளவுக் கதி தோஷி
பித்தனைப்போல பிதற்றிக் கத்தியே புலம்பு மேழைப்
பேதையைக் கடைத்தேற்றிப் பிழைக்க வை யேசு ஸ்வாமி!

3. கள்ளனாம் கபடனென்னைத் தள்ளி விட்டாலாவதென்ன?
கல்லைப்போல் கடினங் கொண்ட கர்ம சண்டாளன் பாழும்
உள்ளமுங் கரைந்தே உன்றன் உயர் சிலுவையினன்பால்
உலையிலிட்ட மெழுகாய் உருகவை யேசு ஸ்வாமி!

https://www.youtube.com/watch?v=RreJQ4QgPDs

அன்னை தந்தை உற்றார் சுற்றார் – ஆருமுதவுவரோ
அதிசய மனுவேலா – ஆசை என் யேசு ஸ்வாமீ

பண்ணின துரோகமெல்லாம் – எண்ணினா லெத்தனைகோடி
பாதகத்துக் குண்டோ எல்லை – பரதவித்தேனே தேடி
கண்ணினாலுன் திருவடிக் – காண நான் தகு மோதான்
கடையனுக்கருள்புரி – மடியுமுன் யேசு ஸ்வாமீ

அஞ்சியஞ்சித் தூர நின்றென் – சஞ்சலங்களை நான் சொல்லி
அலைகடல் துரும்புபோல் – மலைவு கொண்டே னானையோ
கெஞ்சிக் கெஞ்சிக் கூவுமிந்த – வஞ்சகன் முகம்பாராய்க்
கிட்டி என்னிடம் சேர்ந்து – க்ருபைவை யேசு ஸ்வாமீ

எத்தனை கற்றாலும் தேவ – பக்தியேது மற்ற பாவி
எவ்வளவு புத்திகேட்டும் – அவ்வளவுக்கதி தோஷி
பித்தனைப் போல பிதற்றிக் – கத்தியே மேழைப் புலபும்
பேதையைக் கடைத் தேற்றிப் – பிழைக்கவை யேசு ஸ்வாமீ

கள்ளனாம் கபடனென்னைத் தள்ளிவிட்டாலாவதென்ன
கல்லைப்போல் கடினங்கொண்ட- கர்ம சண்டாளன் பாழும்
உள்ளமுங்கரைந்தே உன்றன் – உயர் சிலுவையினன்பால்
உலையிலிட்ட மெழுகாய் – உருகவை யேசு ஸ்வாமீ

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks