உலகும் வானும் செய்தாளும் ஒப்பில் சர்வ வல்லவராய்
இலகுமருளாம் தந்தையாம் எம்பிரான்றனை நம்புகிறேன்
அவரொரு பேறாமைந்தனுமாய் ஆதிமுதலெங்கர்த்தனு மாய்த்
தவறிலேசு க்கிறிஸ்துவையும் சந்ததமே யான் நம்புகிறேன்
பரிசுத்தாவி அருளதனால் படிமேல் கன்னிமரியிடமாய்
உருவாய் நரரவதாரமதாய் உதித்தாரெனவும் நம்புகிறேன்
பொந்துபிலாத்ததி பதினாளில் புகலருபாடுகளையேற்று
உந்துஞ் சிலுவையறையுண்டு உயிர்விட்டாரென நம்புகிறேன்
இறந்தே அடங்கிப் பாதாளம் இறங்கி மூன்றாம் தினமதிலெ
இறந்தோரிட நின்றே உயிரொடெ ளுந்தாரெனவும் நம்புகிறேன்
சந்தத மோட்சம் எளுந்தருளிச் சருவவல்ல பரனான
எந்தை தன்வலப் பாரிசமே யிருக்கிறாரென நம்புகிறேன்
உயிருள்ளோரை மரித்தோரை உத்தமஞாயந் தீர்த்திடவே
ஜெயமாய்த் திரும்பவருவாரெனச் சிந்தையார நம்புகிறேன்
பரிசுத்தாவியை நம்புகிறேன் பரிசுத்த மாபொதுச்சபையும்
பரிசுத்தர்களின் ஐக்கியமும் பரிவாயுண்டென நம்புகிறேன்
பாவமன்னிப்புளதெனவும் மரித்தோருயிர்த் தெளுவாரெனவும்
ஒவாநித்ய ஜீவனுமே உளதெனவும் யான் நம்புகிறேன்
விசுவாசப் பிரமாணப் பாடல்
உலகும் வானும்.. செய்தாளும்…
ஒப்பில்.. சர்வ..வல்லவராய்
இலகு மருளாம்.. தந்தையாம்..
எம்பிரா…னை.. நம்புகிறேன்
அவரொரு பேறா.. மைந்தனுமாய்…
ஆதி.. முதலெங்.. கர்த்தனுமாய்த்
தவறி லேசுக்.. கிறிஸ்துவையும்..
சந்தத மேயான்.. நம்புகிறேன்
பரிசுத்தாவி..அருளதனால்..
படிமேல்..கன்னி..மரியிடமாய்
உருவாய் நராவ..தாரமதாய்..
உதித்தா..ரெனவும் நம்புகிறேன்
பொந்துபிலாத்ததி..பதி நாளில்..
புகலறு.. பாடுகளை..யேற்று
உந்துஞ் சிலுவையில் அறையுண்டு..
உயிர்விட்டார்.. என் நம்புகிறேன்
இறந்தே அடங்கிப்.. பாதாளம்…இறங்கி..
மூன்றாம்..தினமதிலே
இறந்தோரிட நின்றே உயிரோடு…
எழுந்தா..ரெனவும்..நம்புகிறேன்
ஆமென்…சுவாமி! ஆ…மென் சுவாமி! ஆமென்…சுவாமி!
சந்தத மோட்சம்..எழுந்தருளிச்..
சருவ..வல்ல..பரனான
எந்தை தன் வல..
பாரிசமே.. யிருக்கின்..றாரென நம்புகிறேன்
உயிருள் ளோரை..மரித்தோரைரை உத்தம்..
ஞாயந்..தீர்த்திடவே
ஜெயமாய்த்திரும்ப..வருவாரெனச்..
சிந்தை..யார..நம்புகிறேன்
பரிசுத்ததாவியை..நம்புகிறேன்,
பரிசுத்தமா..பொதுச்சபையும்
பரிசுத் தர்களின்..ஜக்கியமும்..
பரிவாய் உண்டென..நம்புகிறேன்
பாவமன்னிப்பு..உளதெனவும் மரித்தோர்..
உயிர்த்தெழு..வாரெனவும்
ஓவா நித்திய..ஜீவனுமே..
உள்ளதெனவும் நம்புகிறேன்
ஆ…மென் சுவாமி! ஆ…மென் சுவாமி! ஆமென்…சுவாமி!